Monday, August 6, 2012

தமிழ் M.A பாடல் வரிகள் !



பறவையே எங்கு இருக்கிறாய் ?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே !

பறவையே எங்கு இருக்கிறாய் ?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே !

அடி என்பூமி தொடங்கும் இடமெது நீதானே !
அடி என்பாதை இருக்குமிடமெது நீதானே !
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருமே !
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ ? 
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ ?
நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக !
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக !

பறவையே எங்கு இருக்கிறாய் ?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே !

உன்னோடு நானும் போகின்ற பாதை 
இது நீளாதோ தொடுவானம் போலவே !
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்,
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்.
இந்த புல் பூண்டும் பறவையும் நாமும் போதாதா ?
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா ?

முதல் முறை வாழப் பிடிக்குதே !
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே ! 
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே ! 
முதல் முறை கதவு திறக்குதே !
முதல் முறை காற்று வருகுதே !
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே!

ஏழை !
காதல் !
மலைகள் தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்.
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி,
உடையாமல் உருண்டோடும் நதி ஆகிடுவோம் !
இதோ இதோ இந்த பயணத்திலே,
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்.
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்.
இந்த நிகழ்காலம் இப்படியே தொடராதா !
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா?

முதல் முறை வாழப் பிடிக்குதே !
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே ! 
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே ! 
முதல் முறை கதவு திறக்குதே !
முதல் முறை காற்று வருகுதே !
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே!